Linux operating system -ல் c program run செய்வது எப்படி in tamil
Linux -ல் c program run செய்வது எப்படி :
How to run a c program in linux
முதலில் linux ல் left top icon -ஐ click செய்து terminal என தேடுங்கள்
பிறகு terminal-ஐ open செய்து கொள்ளுங்கள் .terminal இது போன்று $ symbol -லுடன் காட்சியளிக்கும்.
பின் இந்த கமெண்ட்டை type செய்யுங்கள்.
gedit filename.c
இதில் filename என்பது உங்கள் c program file-ன் name இதை நீங்கள் முடிவு செய்யலாம்.
இந்த கமெண்ட்டை enter செய்தவுடன் ஒரு editor open ஆகும் நீங்கள் தேர்வு செய்த filename உடன்.
இப்போது உங்களது c program-ஐ editor-ல் type செய்து save பண்ணிக் கொள்ளுங்களுங்கள்.
உதாரணத்திற்கு,
#include<stdio.h>
void main( )
{
printf("Example");
}
அதன் பிறகு இந்த c program -ஐ compile செய்ய வேண்டும் அதற்காக புதிதாக இன்னொரு terminal open செய்து இந்த கமெண்ட்டை உள்ளிடுங்கள்.
gcc -o filename filename.c
இந்த கமெண்ட் நீங்கள் save செய்த c program-ஐ compile செய்துவிடும். ஒருவேளை உங்கள் program-ல் errors இருந்தால் compile command error message தரும். அப்போது நீங்கள் மறுபடியும் அந்த file -ஐ open செய்து errors clear பண்ணி திரும்பவும் compile செய்ய வேண்டும்.
நான் முன்னரே குறிப்பிட்டது போல file name என்பது user defined தான்.
இந்த c program -ஐ run செய்ய
./filename
என்ற கமெண்ட்டை உள்ளிடவும்.
.c என்ற extension இந்த கமெண்டில் use பண்ணக் கூடாது. இப்போது நீங்கள் save செய்த program run ஆகும்.
Comments
Post a Comment